மேரீஸ் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
ஊட்டி : ஊட்டி மேரீஸ் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஊட்டி, செயின்ட் மேரீஸ் ஆலயத்தில், வழக்கமான பாரம்பரிய முறையில் நள்ளிரவு புனித சடங்குகள் மற்றும் ஈஸ்டர் திருப்பலி நடந்தது. பங்கு குருக்கள் வின்சென்ட் மற்றும் எட்வின் சார்லஸ் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர் . இரவு, 11:00 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டன .
பங்கு மக்கள் அனைவரும், ஆலயத்தின் முன் வாயில் பக்கம் நிற்க, பங்கு தந்தை வின்சென்ட், புதிய நெருப்பை பற்றவைத்து ஆசிர்வதித்தார். பின்பு, ஆலயத்தின் உட்பகுதியில், எரிந்த மெழுகுவர்த்தியை குரு ஏந்தி சென்றவுடன், அனைவரும் மெழுகுதிரியை ஏற்ற ஆலயம் முழுவதும் ஒளிபெற்றது. பின்னர் புனிதநீர் மந்திரிக்கப்பட்டது. பின்பு, சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது .
அதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.