உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் தொட்டப்பா பெருவிழா துவக்கம்

ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் தொட்டப்பா பெருவிழா துவக்கம்

கோத்தகிரி : கோத்தகிரி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில், தொட்டப்பா பெருவிழா நேற்று துவங்கி, 22ம் தேதிவரை நடக்கிறது. விழா துவக்க நாளான நேற்று காலை, 9:00 மணிமுதல், 10:30 மணிவரை, கணபதி ஹோமம், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பகல், 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை,4:30 மணிக்கு, கொடிமரபூஜை நடந்தது. இன்று (18ம் தேதி) பகல், 12:00 மணிக்கு சிறப்புஅபிஷேக அலங்கார பூஜையும், மாலை, 4:00 மணிக்கு, திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 19ம் தேதி, காலை, 9:00 மணி முதல், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை கொலுவில் அமர்த்த, பஞ்சகாவய் பூஜை, அச்சுவெல்ல கோட்டை கட்டி, அழகு கரும்பு பந்தல் அமைத்து, வெற்றிலை தோரணம் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜையை தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, மகளிர் பக்தி கலை நிகழ்ச்சி நடக்கிறது. 20ம் தேதி, டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் இருந்து, அலகு சேவையுடன் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவீதி உலா வந்தடைந்து, அச்சுவெல்லக்கோட்டையில் கொலுவில் அமர்த்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து, பகல். 12:00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை, மாலை, 6:00 மணிக்கு, தவத்திரு.தத்துவன சைத்தன்யா குழுவினரின் சிறப்பு பஜனை இடம்பெறுகிறது.

வரும், 22ம் தேதி, காலை, 6:00 முதல், 9:00 மணிவரை மஞ்சள் நீராட்டு விழா சிறப்பு பூஜையுடன், விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !