உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி ஆனந்த சாய்பாபா கோவிலில் வருண ஜெப யாகம்

ஷீரடி ஆனந்த சாய்பாபா கோவிலில் வருண ஜெப யாகம்

திருப்பூர்: பொல்லிகாளிபாளையம் சரவணா கார்டனில் உள்ள ஷீரடி ஆனந்த சாய்பாபா கோவிலில், சாய்பாபாவை வேண்டி, மழை பெறும் வருண ஜெப யாகம் நேற்று மாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு, சாய்பாபா கோவிலில் யாக குண்டம் நிறுவப்பட்டு, கோவில்பாளையம் ரமேஷ் சிவாச்சாரியர் பூஜைகளை நடத்தினார். யாக வஸ்துகளான நெய், தேன், பால், பழம், பூக்கள், விபூதி, குங்குமம் மற்றும் மூலிகைகள் உள்ளிட்டவை குண்டத்தில் வார்க்கப்பட்டு, யாகம் நடத்தப்பட்டது. சாய்பாபா பக்தர்களும், பொதுமக்களும் யாக பூஜையில் திரளாக பங்கேற்று, மழை வேண்டி சாய்பாபாவை வழிப்பட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனந்த சாய்பாபா கோவில் நிறுவனர் மணிகண்டன் தலைமையில், பக்தர்கள் யாக பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !