ஆதிகேசவ பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம்
ADDED :3190 days ago
ஸ்ரீபெரும்புதூர்: பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாளுக்கு நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாவது நாளான நேற்று காலை, தங்கப் பல்லக்கும், ஆதிகேசவப் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மாலை மங்களகிரி வாகனத்தில் உற்சவர் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.