உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஆஞ்சநேயர் லட்சதீப விழா: தெப்பல் உற்சவம் கோலாகலம்

விழுப்புரம் ஆஞ்சநேயர் லட்சதீப விழா: தெப்பல் உற்சவம் கோலாகலம்

விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப விழாவில்,  வாண வேடிக்கையுடன், தெப்பல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலில் பிரசித்தி பெற்ற லட்ச தீப விழா, கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கோயில் அருகில் உள்ள குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்ட தெப்பத்தில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வாண வேடிக்கையுடன், நள்ளிரவு வரை மூன்று முறை குளத்தை தெப்பல் சுற்றி வந்தது. இதில் விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !