மழை வேண்டி.. திருப்புத்துார் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை
ADDED :3122 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் பெரிய பள்ளிவாசலில் இருந்து தென்மாப்பட்டு, புதுப்பட்டி, கான்பா நகர், மஸ்ஜிதுான் நுார், அச்சுக்கட்டு ஆகிய ஜமாத்தார்கள் ஊர்வலமாக அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக சென்றனர். மாவட்ட அரசு ஹாஜி முகமது பாரூக் ஆலீம் ஷா தலைமையில் மழை வேண்டி குத்பா ஓதி சிறப்பு தொழுகை நடத்தினர். பெண்களும் பங்கேற்றனர்.