உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் குளத்தை பராமரிக்க வேண்டும் கவர்னர் கிரண்பேடி ஆலோசனை

கோவில் குளத்தை பராமரிக்க வேண்டும் கவர்னர் கிரண்பேடி ஆலோசனை

புதுச்சேரி: கோவில் குளத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்  என, கோவில் நிர்வாகிகளுக்கு, கவர்னர் கிரண்பேடி ஆலோசனை வழங்கினார். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கடந்த சில வாரங்களாக புதுச்சேரியில் உள்ள பழமையான கோவில்களுக்கு சென்று ஆய்வு
செய்து வருகிறார். குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான குளத்தை பார்வையிட்டு, தண்ணீரை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மழை நீரை சேகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும் என, ஆலோசனை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், முத்தியால்பேட்டையில் உள்ள அங்காளம்மன்  கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது கோவில் வரலாறு பற்றி தமிழில் எழுதியுள்ளதை ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும்படி வலியுறுத்தினார். பின்னர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கும்போது, அங்குள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான பூங்கா மரத்தை பார்வையிட்டு விபரம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, கோவில் குளத்தை பார்வையிட்ட கவர்னர்  கிரண்பேடி, கோவில் குளத்திற்கு புதியதாக நீர் வருவதற்கும், கொசுக்கள் வராமல் இருக்க புதுச்சேரி அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக குளத்தை பராமரிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது  அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !