ராமானுஜர் ஜெயந்தி ஏப்.,30, மே 1ல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
ADDED :3101 days ago
ஈரோடு: ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா, ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, ஸ்ரீஎம்பெருமானார் நித்ய கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வரும், 30 மற்றும் மே, 1ல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 30ல் மாலை, 4:00 மணிக்கு உ.வே.கிடாம்பி நாராயணன் சுவாமிகளின் உபன்யாசம், மாலை, 5:00 மணிக்கு அனந்தகிருஷ்ணன் பாகவதர் பஜனை நடக்கிறது. மே, 1ல் காலை, 6:00 மணிக்கு ராமானுஜர் மூலவர் மற்றும் உற்சவர் திருமஞ்சனம், மாலை, 6:00 மணிக்கு
கோஷ்டி பாராயணம், ராமானுஜர் உற்சவமூர்த்தி பூப்பந்தல் அலங்கார வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.