ராமானுஜர் விழாவில் பரிசு மாணவர்களுக்குப் பாராட்டு
ADDED :3101 days ago
ஈரோடு: ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழா குறித்த போட்டியில், பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில், ஈரோடு
கஸ்தூரிரங்கநாதர் கோவிலில், ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திர ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி
நடந்தது. ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவன் அமல், பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்தார். கட்டுரைப் போட்டியில் மாணவன் வடிவேல், இரண்டாமிடம், மாணவர் ஜெயேஷ், மூன்றாமிடம் பிடித்தனர். மூன்று பரிசுகளை பெற்ற மாணவர்களை பள்ளி செயலாளர் சிவானந்தன், தலைமையாசிரியர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.