உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் உள்ள கணபதி, சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி பரிவார ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 5ம் தேதி காலை வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், அனுக்ஞை நடந்தது. 6ம் தேதி கோபூஜை, அஸ்வபூஜை, கஜபூஜை அஷ்டபந்தனம், மகா பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை, ரக்ஷாபந்தனமும், 10 மணிக்கு ஸ்ரீ வாசவி மடத்தின் கவுரவ ஸ்தானிகர் சுரேஷ் சர்மா தலைமையில் வேத ஆகம வல்லுனர் சந்திர மவுலீஸ்வரர் கனபாடிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் ஆர்ய வைசிய சமூகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !