மதுரையில் லட்சுமி வராஹ பெருமாள் திருஅவதார ஜெயந்தி விழா!
ADDED :3202 days ago
மதுரை: அயிலாங்குடி கிராமம், லட்சுமி வராஹ பெருமாள் கோயிலில் திருஅவதார ஜெயந்தி மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலில் இன்று (24ம் தேதி) காலை 7.15 மணிக்குமேல் மதியம் 1.30 மணிக்குள் லட்சுமி வராஹ பெருமாளுக்கு திருஅவதார ஜெயந்தி மஹோத்ஸவம், வராஹ ஹோம ஸ்நபன திருமஞ்ஜன அலங்கார சாற்றுமுறை தீர்த்த கோஷ்டியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்ததில் லட்சுமி வராஹ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 12.15 மணி அளவில் முனைவர் தா.கு. சுப்பிரமணியன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.