திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மகா ஆராதனை விழா
ADDED :3423 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 67 வது மகா ஆராதனை விழா நடந்தது. இதில் ரமணர் பகவான் சன்னதிக்கு வண்ண மலர்கள் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவின் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா ரமணர் பகவான் கீர்தனைகளை பாடினார். இதில் ஏராளமான ரமணர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.