ஆண்டிபட்டி வீரஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா
ADDED :3100 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வீரஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா நடந்தது. நான்கு நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் திருமஞ்சனக்குடம் அழைத்து வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் ராமர், லட்சுமணர் வேடமணிந்து பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாளில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. நிறைவு நாளில் கோயில் வளாகத்தில் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.