உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்

வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்

காரைக்குடி: கோட்டையூர் வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் ஏழூர் செவ்வாய் திருவிழா தேரோட்ட விழா 17ம் தேதி காப்பு  கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் கோட்டையூர், வேலங்குடி, மணச்சை, வடகுடி, பள்ளத்துார், கண்டனுார், பாலையூர்  உள்ளிட்ட ஒவ்வொரு ஊரின் சார்பில் சுவாமிக்கு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் மக்கள் பங்கேற்கும்  தேரோட்டம் நேற்று நடந்தது. மதியம் 2:00 மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு ஊர் பிள்ளையார்  கூடத்திலிருந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரத வீதிகள் வழியாக அம்பாள் தேர், வயல்நாச்சியம்மன் கோயிலுக்கு மாலை  5:00 மணிக்கு சென்றடைந்தது. இன்று காலை 8:30 மணிக்கு வயல் நாச்சியம்மன் கோயிலிலிருந்து, அம்பாள் தேரில் ஊர் திரும்பும்  நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !