கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
உடுமலை: தளி கோட்டை மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.உடுமலை அருகே தளியில் பழமை வாய்ந்த கோட்டை
மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், சித்திரை திருவிழா நேற்றுமுன்தினம் கம்பம் நிலைநாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு தீர்த்தம் செலுத்துதல் உட்பட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்று, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
இதில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மன் திருவீதியுலா உட்பட சிறப்பு பூஜைகள் வரும் மே 2ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.பள்ளபாளையம் செங்குளம் அருகிலுள்ள சுடலை ஈஸ்வரர் கோவிலில், 27ம் ஆண்டு கொடை விழா நேற்றுமுன்தினம் கால்நாட்டுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
வரும் மே 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு, சுவாமி குடியழைப்பு பூஜை, தீர்த்தம் எடுத்து வருதல், ஹோமம் துவக்கம் என மூன்று நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை
விழாக்குழுவினர் செய்துள்ளனர்.