பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றம்
ADDED :3283 days ago
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றப்பட்டது. திருவிழாவின் தொடக்கமாக, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சுவாமி சன்னிதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் பஞ்சமூர்த்திகள் வீதிவலம் வந்தார். தினமும் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வர உள்ளனர். மே 7ல் மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மறுநாள் காலை தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.