உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சிவகாசி: திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாத சிவன் கோயில் சித்திரை திருக்கல்யாண விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.  இதை  முன்னிட்டு மூஷிக வாகனத்தில் விநயாகர் வீதி உலா நடந்தது. அங்குரார்பனம், கொழுமேளம் நடந்தன. கொடியேற்ற விழா முடிந்து மீனாட்சி அம்பிகை கருநெல்லிநாத சுவாமி, பிரியாவிடையுடன் காட்சி அளித்தார். சிறப்பு தீபாராதனை  நடந்தது. முக்கிய விழாவான சுவாமிக்கு திருக்கல்யாணம் மே  5 ல் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !