கடலுார் பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழா
ADDED :3415 days ago
கடலுார்: கடலுார் அடுத்த பிள்ளையார்மேடு பச்சை வாழியம்மன் கோவில் தீ மிதி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். விழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை தீ மிதி விழா நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.