உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநகரி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் கோலாகலம்

திருநகரி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் கோலாகலம்

மயிலாடுதுறை: திருநகரி கல்யாணரெங்கநாதர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரியில் 108 திவ்யதேசங்களில் 37வது தலமான அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திரும ங்கை ஆழ்வார், குரசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் தீர்த்தமான க்கிலாதினி புஷ்கரணி மிகவும் சி திலமடைந்ததால் தெப்ப உற்சவம் தடைபட்டது. திருமங்கை ஆழ்வாரின் அவதார தலமான இங்கு ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு கோயில் ஸ்தலத்தார் கள், பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ 1.5 கோடி மதிப்பில் தீர்த்க்குளத்தை தூர்வாரி, கருங்கல் திருப்பணி செய்தனர். திருப்பணிகள் முடிந்த நிலையில் தடைபட்ட தெப்ப உற் சவம் 200 ஆண்டுகளுகளுக்கு பின்னர் நேற்று இரவு நடைபெற்றது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் அமிர்தவள்ளித் தாயார் சமேத கல்யாண ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் மற்றும் ராமானுஜர் பல்லக்கில் க்கிலாதினி புஷ்கரணிக்கு வந்து அங்கு அலங்கரிக் கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தெப்பம் மூன்றுமுறை தீர்த்தக்குளத்தை வலம் வந்தது. அப்போது திரளான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து பெருமாளை சேவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !