மழை வேண்டி அழகர்கோவில் வருணஜெபம்
ADDED :3109 days ago
அழகர்கோவில்: தமிழகத்தில் மழை வேண்டி அழகர்கோவில் பெருமாள் அபிஷேகத்திற்கு நூபுரகங்கை தீர்த்தத்திலிருந்து தீர்த்த நீர் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜை நடந்தது. நாராயணன் வாவி குளத்தில் அம்பி பட்டர் தலைமையில் வருண ஜெபம் நடந்தது. பூஜை முடிந்து தீர்த்த நீரை குளத்தில் ஊற்றினர்.சோலைமலை முருகன் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில்களிலும் வருண ஜெபம் நடந்தது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார்.