உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடம் வடுகநாதசுவாமி கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு

பல்லடம் வடுகநாதசுவாமி கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு

பல்லடம் : கணபதிபாளையம் வடுகநாதசுவாமி கோவில், 8ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் நடந்தன. பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சியில், பிரசித்தி பெற்ற
வடுகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில், 8ம் ஆண்டு விழா, நடந்தது.
இதையொட்டி, திருவிளக்கு வழிபாடு, யாக பூஜை, நூறாயிரம் பரவுதல், பேரொளி வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, 108 சங்காபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. காளிவேலம்பட்டி கலைக்குழு சார்பில், வள்ளிக்கும்மி ஒயிலாட்டம்
நடந்தது. விழாவையொட்டி, பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !