உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம யதோக்தகாரி பெருமாள் கோவில் ராமானுஜர் ஆயிரமாவது அவதார விழா

காஞ்சிபுரம யதோக்தகாரி பெருமாள் கோவில் ராமானுஜர் ஆயிரமாவது அவதார விழா

காஞ்சிபுரம்: ராமானுஜரின், ஆயிரமாவது அவதார விழாவை  யொட்டி, காஞ்சி யதோக்தகாரி பெருமாளும், ராமானுஜரும்  வீதியுலா வந்தனர். காஞ்சிபுரத்தில், வைணவ கோவில்களில் பிரசித்தி பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய
தேசங்களில் ஒன்றான, கோமளவல்லி சமேத, யதோக்தகாரி  சுவாமி என, அழைக்கப்படும், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலில், ராமானுஜரின் ஆயிரமாவது திருஅவதார
உற்சவத்தையொட்டி, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.

அதை தொடர்ந்து, தேவியர்களுடன் பெருமாளும், ராமானுஜரும், சின்ன காஞ்சிபுரம் பகுதி, முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் சுவாமியை
தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !