உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார உற்சவம்

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார உற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில்,  ராமானுஜர் அவதார உற்சவம் நடைபெற்றது.ராமானுஜர் ஆயிரமாவது அவதார ஆண்டை முன்னிட்டு, இக்கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், ராமானுஜர்
வீதியுலா சென்றார்.

கோவில் திரும்பிய போது, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை  தாயார், பூதத்தாழ்வார் மற்றும் ஆண்டாள், அவருக்கு மங்களாசாசன மரியாதை அளித்தனர். தொடர்ந்து, மாலை, பூதத்தாழ்வார் அவதார மண்டபத்தில், பெருமாள், தேவியர், பூதத்தாழ்வார், ராமானுஜர் ஆகியோருக்கு, அபிஷேக திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை நடைபெற்று,  வீதியுலா சென்றனர். கோவில் திரும்பியபின், திருவாய்மொழி  சாற்றுமறை நடைபெற்று, பெருமாள், ராமானுஜருக்கு பரிவட்ட  மரியாதை அளித்தார்.பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

உற்சவத்தில், திருமலை அனந்தான்பிள்ளை பரம்பரையினர்,  ராமானுஜருக்கான, கற்கள் இழைத்த திருத்தண்டத்தை, நன்கொடையாக அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !