உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி : தட்சிணாமூர்த்தி நகர் புத்துமாரியம்மன் கோவில்  கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  சொக்கநாதன்பேட்டை தட்சிணாமூர்த்தி நகர்  புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி,  காலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 29ம் தேதி காலை 6:00 மணிக்கு, புதிய சாமி சிலைகள் கரிகோல  ஊர்வலம் நடந்தது. மாலையில் 4:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், பரிவார மூர்த்திகள் கும்பஸ்தாபனம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது.

நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியும், மாலை 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தனம் சாற்றுதல், சுமங்கலி பூஜை, சுலாசினி பூஜை, தம்பதி பூஜைகள் நடந்தது.நேற்று காலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடத்தப்பட்டு, கடம்
புறப்பாடு நடந்தது.காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள், கோவில் கோபுர கலத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்
ரங்கசாமி, ஜெயபால் எம்.எல்.ஏ., முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !