நாமகிரிப்பேட்டை மழை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :3118 days ago
நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளியில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவமழை குறைவாக பெய்தது. இதனால், பல இடங்களில் வறட்சி அதிகமானதால் விவசாய நிலங்களில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீராப்பள்ளி டவுன் பஞ்., மக்கள் சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் தினசரி மார்க்கெட் பின்புறம் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு மழை வேண்டி சிறப்பு யாகம் துவங்கியது. கோமாதா பூஜையுடன் நடந்த இந்த யாகத்தில் இப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிவராஜ் குருக்கள் யாகத்தை நடத்தி வைத்தார். சற்று நேரத்தில், தூறலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.