உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதருக்கு நாளை அன்னாபிஷேகம்!

மூலநாதருக்கு நாளை அன்னாபிஷேகம்!

பாகூர் : பாகூர் மூலநாத சுவாமி கோவிலில் நாளை (10ம் தேதி) அன்னாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி மாலை 6 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு, லிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணியளவில், சுவாமியின் திருமேனியில் உள்ள அன்னம் கலைந்து சண்டிகேஸ்வரர் சுவாமியை வலம் வந்து கோவிலின் தீர்த்த குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் கோடி லிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். விழா ஏற்பாடுகளை அமைச்சர் தியாகராஜன், கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !