நாமக்கல் சுயம்பு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா துவக்கம்
நாமக்கல்: நாமக்கல் - சேலம் சாலை, செல்லப்பம்பட்டியில் சுயம்பு மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த ஏப்., 12ல் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, பால்குட ஊர்வலம்; நேற்று, காவிரி தீர்த்தம் அழைத்தல் நடந்தது. இன்று இரவு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார். நாளை (மே, 4) காலை கோடு கிழித்து கும்பிடுதல், உருவாரம் வைத்து வழிபடுதல், பொங்கல், மாவிளக்கு, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடக்கிறது. வரும், 5 காலை சுற்றுவட்டார கிராமங்களுக்கு அம்மன் திருவீதி சென்று அருள்பாலிக்கிறார். வரும், 6 மதியம் அம்மன் வீதி உலா,
மஞ்சள் நீராட்டு விழா, மூஷிக வாகனத்தில் விநாயகர் ஊர்வலம், வாணவேடிக்கை, கம்பம் எடுத்து கரை சேர்த்தல் நிகழ்வு நடக்கிறது. வரும், 7ல் ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன்
பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.