உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொடக்குறிச்சி நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு ரூ.3.10 கோடியில் பாலம்

மொடக்குறிச்சி நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு ரூ.3.10 கோடியில் பாலம்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம் அருகே, காங்கேயம்பாளையம் காவிரி ஆற்றில், பழமை வாய்ந்த நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. காவிரியில் தண்ணீர்
செல்லும்போது, பரிசல் மூலமே கோவிலுக்கு செல்ல முடியும். இதனால் பல சமயங்களில், சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர். சித்திரை மாதத்தில் இங்கு
திருவிழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து  கொள்வர். அப்போது போதுமான பரிசல் இல்லாததால், பலர் தூரத்தில் இருந்தே, சுவாமியை தரிசித்து சென்று விடுவர். எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என்று, பக்தர்கள்
தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மின் வாரியத்துறை சார்பில், 3.10 கோடி ரூபாயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில்
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, ஈரோடு எம்.பி., செல்வக்குமார சின்னையன், நட்டாற்றீஸ்வரர் நல அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், செயலாளர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !