குன்னூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3116 days ago
குன்னூர் : குன்னூர் காட் டேரி பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூகுண்டம் திருவிழா நாளை துவங்குகிறது. குன்னூர் காட்டேரி பகுதி யில் செலவிப் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஒன்பதாவது ஆண்டு பூகுண்டம் திருவிழா மற்றும், 22வது ஆண்டு கோவில் திருவிழா நாளை காலை, 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலை 6:00 அம்மன் அழைப்பு நடக்கிறது. 6ம் தேதி பகல், 12:00 மணிக்கு கரக உற்சவ ஊர்வலம், மாவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. 7 ம் தேதி மதியம் பூகுண்டம் இறங்குதல், அன்ன தானம் ஆகியவை நடக்கிறது. மாலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.