கோத்தகிரி முனீஸ்வரர் கோவில் 61வது ஆண்டு விழா
கோத்தகிரி : கோத்தகிரி பில்லிக்கம்பை கோவில்மேடு அருள்மிகு சக்தி முனீஸ்வரர் திருக்கோவிலில், 61வது ஆண்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 30ம் தேதி, நள்ளிரவு சக்தி அழைப்பு மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இம்மாதம், முதல் தேதி, கங்கையில் இருந்து கரக ஊர்வலம், ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம், 2ம் தேதி, காலை 10:00 மணிக்கு, பொங்கல் பூஜையும், பகல், 12:00 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையும், மாலை, 5:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை, 6:00 மணிக்கு, ஐயனின் கரகம் கரை சேர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பில்லிக்கம்பை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சக்தி முனீஸ்வரரை வழிபட்டனர். வரும், எட்டாம் தேதி, மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை முனீஸ்வரர் இளைஞர் சங்கம், மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட, பொதுமக்கள் செய்திருந்தனர்.