உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் அம்மன் பவனி

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் அம்மன் பவனி

சிவகாசி, சிவகாசி பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கல் விழா கடந்த 2ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது.முதல் நாள் திருவிழாவில் அம்மன் சிங்க வாகனம், 2ம் நாள் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3ம் நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. காகா குரூப் இண்டஸ்ட்ரீஸ் சார்பாக நடந்த விழாவில் காலையில் அம்மன் வெள்ளி ஊஞ்சலில் எழுந்ததருளி வீதிஉலா வந்து அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு அம்மன் கைலாச பர்வத வாகனத்தில் வீதி உலா வந்தார். பெண்கள் தீப விளக்கு ஏந்தி விழிபாடு செய்தனர். கேரள பாரம்பரிய பஞ்ச வாத்தியங்கள் முழுங்கிட ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீகங்கா சரிதம், ஸ்ரீயுவதுர்க்கை, அசுரசம்ஹாரம் சுவாமிகள் வண்ணமிகு அலங்கார வாகனத்தில் உலா வந்தனர். சுவாமி சிலைகளில் கிராபிக்ஸ் காட்சிகள் பொருத்தப்பட்டு தத்ரூபமாக விளக்கும்படி இருந்தது. ரதவீதிகளில் சுவாமி வாகனங்கள் ஊர்வலமாக சென்றன. பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். வாணவேடிக்கையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !