எஸ்.குளத்தூரில் இன்று வருண ஜபம்
ADDED :3111 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்தூரில் இன்று, வருண ஜபம் நடக்கிறது.
சங்கராபுரம் பிராமணர் சங்கம் சார்பில், எஸ்.குளத்தூரில் இன்று வருண ஜபம் நடக்கிறது. சங்கராபுரம் பகுதியில் பருவமழை பொய்த்ததால், விவசாய கிணறுகளில் நீர் மட்டம், வெகுவாக குறைந்தது. குடிநீர் தட்டுபாடு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். இதையடுத்து, சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்தூரில் இன்று காலை 6:00 மணிக்கு கோ- பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வேள்வி பூஜை நடக்கிறது. தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்று, வருண ஜபம் நடக்கிறது.