கோத்தகிரி கோவில் விழாவில் பரவசப்படுத்திய பாவக்கூத்து
கோத்தகிரி : கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு நிகழ்ச்சியாக,பாவக்கூத்து நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா, 24ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாள்தோறும், அம்மனுக்கு
சிறப்பு மலர் அலங்கார அபிஷேக வழிபாடும், அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.
பல்வேறு உபயதாரர்களின் சார்பில், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவ்விழாவின் ஒரு நிகழ்வாக, கோத்தகிரி வட்டார மறுநாடன் மலையாளிகள் சங்கம் சார்பில்,
அம்மன் திருக்காவடி ஊர்வலம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, டானிங்டன் பகுதியில் இருந்து, பஞ்சவாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க, திருக்காவடி ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில், பாவக்கூத்து, மயில் காவடி, மேளம் முழங்க தர்மயுத்தம் மற்றும் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி போன்றவை, பிரமிக்க வைத்தது.
தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்கார அபிஷேக வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் கேரள ரதத்தில்
திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று, (8ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு, அன்னப்பட்சி
வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழாக்குழுவினர் உட்பட, பொதுமக்கள் செய்து வருகின்றனர்.-