உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை

குன்னூர் சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை

குன்னூர் : விஸ்வ இந்து பரிஷத் மகளிர் அணி சார்பில், 33வது ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிளக்கு சிறப்பு பூஜை விழா, 10ம் தேதி மாலை 3:30 மணிக்கு நடக்கிறது.

குன்னூர் விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில், திருவிளக்கு பூஜை அம்பாள் அர்ச்சனையுடன் நடக்கிறது. விழாவுக்கு பைக்காரா ஹன்ஸ்தேவ் சன்னியாசி யோகேஸ்வரி தேவி, தலைமை வகிக்கிறார். வண்டிச்சோலை சாரதா பிரம்ம வித்யா கேந்திரா
சன்னியாசி ஜீவன் முக்தானந்தா, முன்னிலை வகிக்கிறார்.பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியை சுஜாதா பேசுகிறார். ஏற்பாடுகளை விஸ்வ இந்து பரிஷத் மகளிர்
கிளைநிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !