உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனூர் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் திருக்கல்யாணம் தேரோட்டம்

சின்னமனூர் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் திருக்கல்யாணம் தேரோட்டம்

சின்னமனூர்:சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இன்று மாலை
தேரோட்டம் நடக்கிறது.இக் கோயிலில் சித்திரை திருவிழா 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பூலாநந்தீஸ்வரரை கரம் பிடிக்கும் சிவகாமியம்மனின் மணக்கோலம் காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உபயதாரர்கள் சார்பில் பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. குளிர்பானங்கள், தண்ணீர் பந்தல், நீர்மோர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டன.

தேரோட்டம்சுவாமியும் அம்மனும் கோயிலில் இருந்து ஊர்வலமாக தேருக்கு
வந்தடைகின்றனர். தேர் எழுந்தருளல் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியுடன்
துவங்குகிறது. கண்ணாடி கடை முக்கில் தேர் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை மாலை அங்கிருந்து புறப்படும் தேர் நிலை வந்தடையும்.சித்திரை திருவிழா கம்பம்
சித்தி.ரைகவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.அம்மன் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வான அக்னிசட்டி
எடுத்தல், மாவிளக்குஎடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நேற்று முன்னாள் அறங்காவலர் ராமசாமித்தேவர், ஜெயரத்தினம்மாள்நினைவாக அவரது குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். முன்னதாக அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ஜெயப்பாண்டியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !