உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

திருவாடானை; திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தேரோட்டம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயில் சித்திரை திருவிழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை துவங்கியது. பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருடன் காலை 8:30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 11 மணிக்கு தேர் கோயில் முன்பு நிறுத்தப்பட்டது. பின்பு மாலை 3:00 மணிக்கு தேரோட்டம் துவங்கி, 4:00 மணிக்கு தேர்நிலைக்கு சென்றடைந்தது. பின்பு தேர்தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர்

சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அரசு போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரைத் தேரோட்டம் பக்தர்களின் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க நடந்தது.

பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் கடந்த பத்து நாட்களாக சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசாலாட்சி சமேத சந்திரசேகரர் திருக்கல்யாணம் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு இரண்டு திருக்கோயில்களிலும் விநாயகர், முருகன் தேர்கள் முன் செல்ல சுவாமி பிரியாவிடையுடனும், அம்பாள் தேர் என தனித்தனியாக வலம் வந்தனர். தேரினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மதியம் 12 மணியளவில் நிலையை அடைந்தது. இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !