வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்காக ஏப்., 19ம் தேதி கொடியேற்றப்பட்டது. அம்மனுக்கு தினமும் மாலையில் மாவு பூஜை செய்யப்பட்டு, இரவில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் பாலித்தார். இன்று திருவிழா துவங்குகிறது. மலர் விமானத்தில் அம்மன் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு பவனி வருதல், நாளை (10ம் தேதி) முத்துப்பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 11ம்தேதி புஷ்ப பல்லக்கில் பவனி வருதல், 12ம்தேதி தேர் வடம் பிடித்தல், 15ம் தேதி தேர்நிலைக்கு வருதல், முத்து சப்பரத்தில் தேர் தடம் பார்த்தல் நடக்கிறது. 16ம்தேதி ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தென் மாவட்ட அளவில் பக்தர்கள் திருவிழாவிற்கு வந்து நேர்த்தி கடன் செலுத்துவர். அவர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து வீரபாண்டிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.