உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் இருந்த மிக பழமையான கொடிமரம் அகற்றம்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் இருந்த மிக பழமையான கொடிமரம் அகற்றம்

தாரமங்கலம்: கைலாசநாதர் கோவிலில் இருந்த கொடிமரம் அகற்றப்பட்டது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் எதிரே, நந்தி சிலை ஒட்டி, 200 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட
கொடிமரம், சிதிலமடைந்து முறிந்து விழும் நிலையில் இருந்தது. தற்போது, கோவில் சீரமைப்பு பணி நடப்பதால், ஆண்டு இறுதிக்குள், கும்பாபிஷேகம் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன், புதிய கொடிமரம் அமைக்க முடிவுசெய்து, பணி நடக்கிறது. நேற்று முன்தினம், ஆகம விதிப்படி, சிதிலமடைந்த கொடிமரத்துக்கு பூஜை செய்து, நேற்று காலை, பழைய கொடிமரம் அகற்றப்பட்டது. அப்போது, கோவில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள், ஊர்முக்கிய பிரமுகர்கள் பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !