குறுக்குத்துறை முருகன்கோயில்சிவன் கோயில்களில் தேரோட்டம்
திருநெல்வேலி: நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் மற்றும் பாளை.,சிவன் கோயில்களில்தேரோட்டம் நேற்று காலை விமரிசையாக நடந்தது. திருநெல்வேலியில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில்,
மிகப்பழமையானது. திருவாவடுதுறை ஆதீனத்தில் கட்டுப்பாட்டில்ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான
சித்திரைத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. விழாவின் 10ம் நாளான நேற்று 8ம்
தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கிறது.திரிபுராந்தீஸ்வரர் கோயில்:
பாளையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வர் கோயிலில் நேற்று காலை தேரோட்டம் மிக விமரிசையாகநடந்தது. ரதவீத வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்துஇழுத்து நிலையம் சேர்த்தனர்.