திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கோ பூஜை
ADDED :3116 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கோ பூஜை நடந்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் காலை 9 :00 மணிக்கு கோ பூஜை நடந்தது. மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடந்த இந்த பூஜையில் ஏராளமான பசுமாடுகள் கலந்து கொண்டன. மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலைகள் அணிவிக்கபட்டன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீப, ஆராதனைகள் நடந்தது. மாடுகளுக்கு பொங்கல் மற்றும் அருகம்புல் உணவாக வழங்கபட்டது. பக்தர்கள் மாடுகளை 3 முறை வலம் சென்று வணங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்த்திகை வழிபாட்டு குழுவை சேர்ந்த செல்லதுரை, பாலசுப்பிரமணியின் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.