வெண்குதிரையில் சோழவந்தான் ஆற்றில் எழுந்தருளினார் அழகர்
ADDED :3178 days ago
சோழவந்தான், சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில். நேற்று காலை 5:30 மணிக்குபெருமாள், அழகர் திருக்கோலத்தில் வெண்குதிரையில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு வைகை ஆற்றில் பச்சைபட்டு உடுத்தி இறங்கினார். அழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சினர். கோவிந்தா முழக்கத்துடன் அழகரை பக்தர்கள் தரிசித்தனர். இன்றிரவு (மே 11) இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயில் அரங்கில் யாதவர்சங்கம் சார்பில் தசாவதாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி லதா உள்ளிட்டோர் செய்து இருந்தனர். பேரையூர்பேரையூர் அருகே பழையூர் அழகர்கோயிலில் சித்திரை திருவிழாயொட்டி அழகர் ஆற்றில் இறங்கினார். முன்னதாக சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து நெல்மணி மாலை அணிவித்து பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்.