உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி விழா சென்னை கோவில்களில் கோலாகலம்

சித்ரா பவுர்ணமி விழா சென்னை கோவில்களில் கோலாகலம்

சென்னை : சென்னையில் உள்ள பல கோவில்களில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில், 1,008 பக்தர்கள் பால் குடம் எடுத்தனர்.

சித்திரையில் வரும் பவுர்ணமிக்கு, தனி சிறப்பு உண்டு. இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பது, காலம் தொட்டு இருக்கும் வழக்கம். சித்ரா பவுர்ணமி அம்மனை பூஜிக்க, மிகவும் சிறப்பு பொருந்திய நாள்.தாயை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் உள்ளோர், தோஷம் நீங்கும் விரத நாளாகவும், இந்நாள் விளங்குகிறது.இந்து மத நம்பிக்கைபடி, ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களை கணிப்பவர், சித்திர புத்திரனார். நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை, நம் இறப்பிற்கு பின் கணித்து, அதற்கேற்ப சொர்க்கம், நரகம், மறு பிறவியோ வழங்கப்படும் என்பது, இந்துக்களின் ஐதீகம். இதனால், சில கோவில்களில், சித்திரகுப்த பூஜையும் செய்யப்பட்டது.சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை நகரில் உள்ள அம்மன் கோவில்களில் பால் குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும், சித்திரைக் கஞ்சி வார்ப்பும் நடந்தன.சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடு, வீதி ஊர்வலங்கள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !