உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வேணுகோபால சுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஓசூர்: ஓசூர் அடுத்த தளி வேணுகோபால சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த தளியில், பழமையான ருக்மணி - சத்யபாமா சமேத சந்தான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்றைய தினம் பெண்கள் மாவிளக்கு எடுத்து சென்று, சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, மதியம், 1:45 மணிக்கு, ஊர் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !