உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

பொங்கலூர் : பொங்கலூர் சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில், குட்டைக்கு அரிசி மாற்றுதல் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. மாவிளக்கு, சுவாமி அழைத்தல், சக்தி கும்பம் ஆலயம் வருதல், பூவோடு கம்பம் சுற்றி வருதல், பூ மிதித்தல், மாதேசிலிங்கம் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், 108 திருவிளக்கு பூஜை, திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடந்தது. நேற்று மாலை, மீனாட்சிவலசு காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து, மாரியம்மன் கோவிலுக்கு, அலகு குத்தி, தேர் இழுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதன்பின், அம்மனின் குதிரை வாகனம் ஊர்வலமாக சென்றது. விழாவில், இன்று மஞ்சள் நீராடல் நடக்கிறது. விழா, ஏற்பாடுகளை கண்டியன்கோவில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !