பூவராகசுவாமி கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED :3431 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. முன்னதாக நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் இரவு 11:30 மணிக்கு தெப்பல் உற்சவம் நடந்தது. இதில் உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவியோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.