மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
ADDED :3118 days ago
தேவகோட்டை: தேவகோட்டை நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா, ஏப். 29 ந்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மறுநாள் கொடியேற்றம் ,காப்புக்கட்டுதலை தொடர்ந்து தினமும் சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தினமும் சிறப்பு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஐந்தாம் நாள் மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. ்அறுபத்தி மூவர் வீதி உலா,பாரிவேட்டை நடந்தது. ஒன்பதாம் நாள் பக்தர்கள் வடம்பிடிக்க தேரோட்டம் நடந்தது. ரிஷபவாகனங்களில் பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது.கோயிலுக்கு எதிரே .உள்ள ஊருணியில் சுவாமி அம்பாள் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தெப்ப உலா நடந்தன. நிறைவு நாளான நேற்று ஏகாதர ருத்ர அபிேஷகம், தாரா ேஹாமம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.