உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலங்கை புத்தர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

இலங்கை புத்தர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

கொழும்பு: இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தர் கோவிலில், பிரதமர் நரேந்திர மோடி, வழிபாடு நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக, நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து, கொழும்பு நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சீமா மால்கா புத்தர் கோவிலில், பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கொழும்பு நகரில், இன்று நடக்கும் சர்வதேச புத்தர் பிறந்த தின கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கிறார்; புத்தமத துறவிகளையும் சந்தித்து பேசுகிறார்.  இந்தியாவின் நிதியுதவியுடன், தமிழ் வம்சாவளியை சேர்ந்த, தோட்ட தொழிலாளர்களுக்காக, டிகோயா பகுதியில், கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை,  பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தமிழ் அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தன் இலங்கை பயணம் தொடர்பாக, டுவிட்டரில், ஆங்கிலத்தில் மட்டுமின்றி, சிங்களம் மற்றும் தமிழிலும், தகவல்களை பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !