உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ­ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்

­ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்

பல்லடம்: ராமலிங்கேஸ்வரர், நெல்லுக்குப்பம்மனுக்கு, திருக்கல்யாண வைபவம், சின்ன வதம்பச்சேரியில் கோலாகலமாக நடைபெற்றது.பல்லடம் அருகே சின்ன வதம்பச்சேரியில் ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் கோவில் உள்ளது. கோவிலின், 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ராமலிங்கேஸ்வரருக்கும், ஸ்ரீ நெல்லுக்குப்பம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மகா கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், பிரவேச பூஜையுடன், விழா துவங்கியது.நேற்று விக்னேஷ்வர பூஜை, மகா ஹோமம், பூர்ணாகுதியும், கலசாபிஷேகம், அலங்காரம், மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்று, சுவாமி திருவீதி உலா காட்சி நடந்தது. அதன்பின், ஸ்ரீராமலிங்கேஸ்வரருக்கும், ஸ்ரீ நெல்லுக்குப்பம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் இனிதே நடைபெற்றது.தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !