உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசக்தி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை

சிவசக்தி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை

ஊத்துக்கோட்டை : சிவசக்தி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் தீமிதித்தனர். பூண்டி ஒன்றியம், மயிலாப்பூர் கிராமத்தில் உள்ளது சிவசக்தி அம்மன் கோவில். இங்கு ஒவ்வொரும் ஆண்டும், சித்திரை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மாதம், 21ம் தேதி, 19ம் ஆண்டு தீமிதி திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கத் துவங்கினர். கடந்த, 6ம் தேதி, காலை, 6:00 மணிக்கு பந்தக்கால் நிகழ்ச்சியும், தொடர்ந்து காப்பு கட்டுதலும், மறுநாள், 7ம் தேதி, திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான, நேற்று முன்தினம் காலை, பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், எல்லை சுற்றுதலும், மாலை, 6:00 மணிக்கு, தீமிதித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், மயிலாப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !