உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

வீரராகவர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், விடையாற்றி உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உற்சவர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். கடந்த 10ம் தேதி பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, விடையாற்றி திருவிழா, நேற்று துவங்கியது. முதல் நாளன்று, வீரராகவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பெருமாள் மாடவீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாவது நாள் விடையாற்றி உற்சவம் இன்று நடக்கிறது. நாளை, மூன்றாவது நாளன்று, விடையாற்றி உற்சவம் நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !